பிரியமானவளே.. காதல்
------------------------------

01.
பிரியமானவளே

பிரியமானவளே நீ எல்லாவற்றிலும்
உயர்ந்து உள்ளத்திற்குள்ளே
ஊடுருவி உவகையோடிரு
மாறாய் மனதை மறைத்து
உண்மையை உதறித்தள்ளிவிட்டு
உடைந்த உள்ளத்தோடோடி
உன்னவனையும் உடைத்துவிடாதே
உள்ளே உவகையோடிரு

02.
காதல்

காதல்
உணர்வின் ஒரு பெயரல்ல
மானுடத்தின் மறுபெயர்
காதல்
உலகில் ஆழமானது
அழகானது அந்த ஒற்றைச்சொல்!
காதல்
மனமெல்லாம் மழையாகப்பொழிந்து
மல்லிகையாய் மலருகின்ற அந்த
மெல்லினிய உணர்வு
காதல்
கொடுத்து வாங்குவதல்ல
அழகாய் பரிமாறிக்கொள்வது
காதல்
பரிமாறும் பாச உணர்வு
பரிமாறும் பாச உணர்வை
அவர் சொல்லிவிட்டார்
இவர் சொல்லிவிட்டாரென்று
இழந்து விடுவதற்கில்லை
காதல்
இது ஒன்றுதான்
இதயத்தால் முழுமையாய்
வெளிப்படுத்தக்கூடிய
ஒரு உயிரின் உன்னத உணர்வு

-கலாநிதி தனபாலன்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-07-14 00:00
Share with others