1998 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மூன்று கவிஞர்களின் கவிதைகளோடு இலவச இணைய வழங்கியொன்றில் 'நிக்குமோ நிக்காதோ' என்ற பெயரில் தொடங்கி படிப்படியாக வளர்ந்து இன்றைய நிலையை அடைந்துவிட்டது வார்ப்பு இதழ். உலகத்தில் வாழும் அனைத்து தமிழ்க் கவிஞர்களையும் முன்னிறுத்தி முற்று முழுதாக தமிழ் கவிதை தொடாபான ஆக்கங்களை வெளியிடுவதென்ற நோக்கில் இவ்விதழ் தொடங்கப்பட்டது. எதிர்பார்த்ததைவிட அளப்பரிய வரவேற்பை கவிதை வாசகர்களிடமிருந்தும் கவிஞர்களிடமிருந்தும், விமர்சகர்களிடமிருந்தும் வார்ப்பு பெற்றுக்கொண்டது. இருந்தபோதிலும் இதழின் குறிக்கோள் நோக்கி இன்னும் வளரவேண்டியுள்ளது.

இதழின் உருமாற்றமும் , பெயர்மாற்றமும் 2000 ம் ஆணடு இடம்பெற்றது. 'நிக்குமோ நிக்காதோ' doublen.com (nikkumo nikkatho) என்ற இணையப்பெயருக்கு மாறியது. அம்மாற்றம் கவிதைப்பிரியர்களை அவ்வளவாக கவர்ந்துவிடவில்லை. தயங்கித் தயங்கியே அப்பெயரை உள்வாங்கிக்கொண்டார்கள். கவிஞர் இசாக் அவர்களின் ஆலோசனைப்படி கவிஞர் மாலியன் அவர்களால் 'வார்ப்பு' என பெயர் சூட்டப்பட்டது. இனி எந்தப் பெயர் மாற்றத்திற்கும் தேவை ஏற்படாது என நம்புகிறோம். வார்ப்புக்கு இப்போது எல்லாப் பக்கமும் வாசல் - உலகத்தமிழ் மக்கள் அனைவராலும் விரும்பி வாசிக்கப்படுகின்ற கவிதையிதழ்.

இனிவரும் காலத்தில் நாட்டுப்புறப்பாடல்களையும் , மொழிபெயர்ப்பு கவிதைகளையும் வார்ப்பில் இணைத்து அவற்றை பகுதிவாரியாக பிரித்து வாசிக்க இலகுவான முறையில் பிரசுரிக்க எண்ணியுள்ளோம். உங்களால் முடிந்தவரை நல்ல கவிதைகளை மொழிபெயர்த்து எமக்கு அனுப்பிவையுங்கள். எமது பாரபம்பரிய சொத்தான நாட்டுப்புறப்பாடல்களையும் சேமித்துவைக்கவேண்டிய கட்டாயம் எமக்கு இருக்கிறது, ஆகவே எம்மோடு சேர்ந்து நீங்களும் உழைப்பீர்கள் என நம்புகிறோம். எழுத்தில் ஏறாத நாட்டுப்புறப்பாடல்களாக இருந்தால் அவற்றை எடுத்துவாருங்கள், பிரசுரிப்போம் எல்லோரும் வாசித்துப் பயன்பெறட்டும்.

காலத்தோடு மாறும் இணையத்தில் வார்ப்பு தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும். வார்ப்பு நிற்கின்றவரையில் தமிழ்க்கவிதைக்கான அதன் பணியும் நிற்கும் என்ற உறுதியோடு செல்கிறோம்.

நன்றி
வார்ப்பு

 

எம்மைப்பற்றி விகடன்

எம்மைப்பற்றி அணி

எம்மைப்பற்றி வாசகர்களின் வார்த்தைகள்

Share with others