வாசல்.. நகர்வு
-----------------------

01.
வாசல்
---------

வார்ப்பின் வாசல் திறந்து
வருகிறேன்
இணைய வலையில்
இலக்கியம் பகிரும்
கவிதைக் காதலி
வளர்மதி வார்ப்பின்
வாசலில் வந்து
இரு கரம் நீட்டி என்
இலக்கியம் தருகிறேன்
இணைத்துக் கொள்வாளோ?

02.
நகர்வு
-----------

நகரும் போதுதான்
நதி அழகு
நடக்கும் போதுதான்
வாழ்க்கை அழகு

நடந்தேன் நடந்தேன்…
ஊரை விட்டு
உறவை விட்டு
ஒரு நகர்வு

நடந்தேன் நடந்தேன்
ஈழம் விட்டு
இருந்த சொந்தம் விட்டு
இன்னொரு நகர்வு

நடந்து கழைத்து
நின்று நினைத்துப்
பெருமூச்சு விட்டேன்
அப்போது தெரிந்தது
வாழ்வின் அருமை
அதற்குள் அடுத்தடுத்த நகர்வுகள்

காலநதியில் கால்பதித்து
கல்வி தேவதையோடு
கைகோர்த்து
கனதூரம் நடந்தேன்
ஓரமாய் ஒளிர்ந்தது
ஒரு புதிய விடியல்
விடியலைக்கண்டு
வட்டம் விட்டு
வெளியே வந்து பார்த்தேன்
வாழ்க்கை வனப்புடையதாயிற்று

நடக்கும் போதுதானே
வாழ்க்கை அழகு
நம்பினேன் நடந்தேன்
நடந்தது வாழ்க்கை
நலமாக.

-கலாநிதி தனபாலன்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-04-22 00:00

கருத்துகள்

நிதி அவர்களுக்கு,

நதியின் நகர்வு பள்ளத்தை நோக்கி நிதியின் நகர்வு சிகரத்தை நோக்கி நதியும் நிதியும் வடதென்துருவங்கள் நிதியின் நகர்வு நதியின் எதிர்திசையில் இரண்டுமே வெற்றியின் ரகசியங்களை வரலாறுகளையும் சுமைகளையும் சுவைகளையும் சுந்தவாறே நீந்துவோரின் இதயத்தை கரைத்துச் செல்கிறது. இலக்கிய நதியில் நிதி நீந்துவது கடல்போல் மகிழ்ச்சியளிக்கிறது தமிழ் இதயங்களுக்கு. பயணங்கள் தொடர தொடர் வாழ்த்துக்கள்!

அன்புடன்
கு.சிதம்பரம்
சீனா

Share with others