- நிர்வாணி
உன் கண்களுக்கு அப்படி என்ன சக்தி
பார்த்தால் நொருங்கிப்போய்விடுகிறேன்
வெட்கத்தால் கூனிக் குறுகி
தலை சாய்வதெல்லாம்
ஒரு நொடிப்பொழுதில் முடிந்துவிடும்
நாளை நிச்சயம் உன் கண்களோடு
என் கண்களை ஒட்டவைப்பேன்
எத்தனை நாளைகள் பறந்தன
இன்னமும் இதயத்துள் ஆர்ப்பரிப்பு
இன்னமும் என்னையும் மீறி ஒரு புன் சிரிப்பு
நீயும் நானும் இப்படியே காதலிப்போம்
உணர்ந்து சொல்கிறேன்
தயவுசெய்து என்னோடு உரச நினைக்காதே
பின் எங்களின் காதலும் செத்துவிடும்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
உரசாதே உன் பார்வை போதும் என்ற இந்த காதல் தூய்மையானதுrnசிறந்த வரிகள்