- நிர்வாணி
மின்னல் வெட்டும்
இடி வெடிக்கும்
மழைதான் அடுத்தது
மாரிகாலம் இப்படித்தான் போகும்
பழைய பள்ளிக்கூடம்
பழைய வாத்தியார்
'கைவேலை' அப்படியொரு பாடம்
திரும்பத் திரும்ப
அம்மியும் குழவியும்
உரலும் உலக்கையும்
ரேடியோவும்
களிமண்ணிலேயே செய்வோம்
கேள்வியே கேட்காத வாத்தியார்
சிந்தனையைத் தூண்டாத
களிமண் மூளை அவருக்கும்
100 க்கு 100 எல்லோருக்கும்
அதுதான் கிடைக்கும்
வாய்க்கால் வழியே
மழைநீர் முட்டி முட்டி ஓடும்
ஒரே மாதி
வெவ்வேறு கடுதாசியில்
கப்பல்கள் விடுவோம்
ஒரே தடத்தில்
அவையும் முட்டியும் மோதியும்
அணைத்தும்
ஒன்றாய் செல்லும்
எம்மைப்போல்
பழகிப்போனது வாழ்க்கை
'அவர் சொன்னால் சரியாயிருக்கும்'
மேய்ப்பரின் பின்னால்
மந்தைகள் செல்லும்
புதிய புதிய மேய்ப்பர் வருவார்
மீண்டும் மீண்டும் மந்தைகள்
பின்னால் செல்லும்
பழகிப்போன வாழ்க்கை.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00