- நிர்வாணி
காலத்தோடு நான்
ஊருக்குப்போய் வந்து
தை பிறந்தால்
ஒரு வருடம்
தை பிறந்தபோதுதான் வருடம் போனது
தெரிந்தது
இப்படித் தெரியாமல்
காலம் ஓடுவதை
பல நிகழ்வுகள் அப்பப்ப
சொல்லித்தான் போகும்
மழலைச் சிரிப்பு ததும்ப
மாமா மாவென்று
காலைச் சுற்றிவந்த
சின்னப்பொடியன்
'உங்களுக்கு ஒண்டும் தெரியாது"
இலாவகமாய் சொல்லிப்போக
மண்டையில் உறைத்தது
சந்தடியில்லாமல் ஓடிச்சென்ற
ஐந்து வருடம்
-- நிர்வாணி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-01-09 00:00