அன்பே தொலைவாகப் போய்விடு
தொலைவு உன்னையும் என்னையும்
இருவருக்காகவும் ஏங்க வைக்கும்
மெல்லத்தீண்டி தீண்டலில் நீ மயங்க
என்னை மறந்து முத்தமிட
சிணுங்கலோடு நீ சிலிர்க்கும்பொழுதெல்லாம்
மோட்சமடி
இது பிரிவல்ல
பிரிவென்று கலங்காதே
எனக்குள் உன்னையும்
உனக்குள் என்னையும்
வலுவாக்கிக்கொள்ளும் முயற்சியிது
முயற்சியில் நானோ நீயோ தோற்றுப்போனால்
எங்களின் காதல் செத்துப்போகட்டும்
கொடிய கால ஓட்டத்தில்
என்றாவது ஒரு நாள்
இருவரும் ஒருவரை ஒருவர்
தேடமுற்படுவோம்
அன்றுதான்
இருவரும் ஒருவரை ஒருவர்
உண்மையாகவே காதலிக்கத் தொடங்குவோம்
நீயும் நானும் மரித்தபின்னும்
எச்சமாய் விட்டுச்சென்றதில்
காதலுமொன்றாய் வாழட்டும்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00

கருத்துகள்

zeenu on 2010-06-28 00:00

அழகிய வரினள் rnவாழ்த்துக்கள்

Share with others