“சராஜிவோ“ வில் கொல்லப்பட்ட
காதலர்களுக்காக இவர் அழுகிறார்
கவிதை எழுதுகிறார்
இவர் வாழுகின்ற இதே தளத்தில்
என் மக்கள் கொல்லப் படும்போது
ஆனந்தமாய் ”பெரேரா” கொண்டாடுகிறார்
ஏன் ?
இறந்து போனவரெல்லாம் மனிதராகத்
தெரியவில்லையா ?
தமிழரென்பதால் மனிதரில்லையா ?
இன்று புரிகிறது
எப்போதோ எங்களின் பழசுகள் சொன்னது
இக்கரையில் ஏதோவொன்றுக்கு
அக்கரை பச்சையாம்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
Share with others