- நிர்வாணி
அவள் விழிகளோடு என் விழிகள் கலந்து
வார்த்தைகளோடு வார்த்தைகள் கலந்து
இன்னும் இன்னும் நெருங்கி
எனக்குள் அவளையும்
அவளுக்குள் என்னையும்
தேட முற்பட்டு
இருவருமே தோல்வியைத் தழுவி
விவாகரத்துக்காய் காத்திருக்கிறோம்
இடையில்
ஏதோ மின்னலாய் ஒரு வாழ்க்கை
ஊரறிய மேள தாளம்
வீடு வீடாய் போசனம்
புதுத்தம்பதியை அயல் பார்த்து
மெலிதான புன்னகை சிந்தி
சுமைகளே இல்லாமல் வாழ்க்கையை
வாழ்ந்து பார்த்தோம்
எல்லாம் மறந்து போகட்டும்
மீண்டும் அவளைக் காதலிக்கவேண்டும்
“கல்யாணம்“ என்ற வார்த்தையையும்
சடங்கையும் மறந்துகொண்டு
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
கவிஞரே! வணக்கம்.உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள். காதல் இல்லாத வாழ்க்கை அஃறிணையாகும். காதலில் ஊடல் இல்லையென்றால் எப்படி இனிக்கும்? விட்டுக் கொடுத்து வாழ்ந்து பார்...வாழ்வின் அர்த்தம் புரியும்.