புரட்சி
விடியல்
தேடல்
வர்க்கம்
சாதி
நான் அதிகம் பாவித்த வார்த்தைகள்
நண்பர்கள் அதிகம் கூடினால்
வாக்குவாதம்
இது சம்பந்தமாகவே இருக்கும்

முற்போக்குவாதி
சிந்தனையாளன்
வாசிப்பவன்
ஆராய்ந்து பேசுபவன்
இதெல்லாம் அவர்கள் என்னைப்பற்றி
சொன்ன வார்த்தைகள்

மேதாவி என்ற போர்வைக்குள்
ஒளிந்துகொள்ள யாருக்குப்
பிடிக்காது ?

பின்னிரா வேளையில்
எவளோ ஒரு இளம் பெண்
நடந்து செல்ல
அவள் ”அதுவாகத்தானிருக்கும்”
எனக்குள்ளிருக்கும் நான் சொல்லிக்கொண்டது

முகமூடி கிழிந்து முகம் தெரிய
உனக்காக
பொய்முகத்தோடு
கவிதை
புனைபெயர்
கூட்டத்தில் கத்தல்
எதுவுமே இனி சாத்தியமில்லை
எனக்கு

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00

கருத்துகள்

This poem is well suitable for your name (i.e. nirvaani).Good job..rnrnrnFriendly,rnKalkish

Share with others