- நிர்வாணி
காதலே !
என்றும் உனை நான் மறவேன்
முதல் நாளில் நீ சிந்திய புன்னகை
இரண்டாம் நாளில் நீ பேசிய
முதல் வார்த்தை
மூன்றாம் நாளில் .....
எதையும் மறவேன் அன்பே
மறக்கவும் முடியாது
இன்னொரு காதலி கிடைக்கும்வரை
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
கவிதையில் கண்டது காதல் அல்ல, கவர்ச்சி, மோகம். . . . புதிய உறவு கிடைத்தபின்பும் வாழ்கின்ற காதலும் இருக்கின்றது. நறுக்கென்று தலையில் குட்டத் தூண்டும் கவிதை.