- நிர்வாணி
தமிழில்: நெல்லை ஜெயந்தா
கருக்கலில் கந்தர் வண்டிகட்டி
கொடிகாமச் சந்தை சென்று
தேங்காய் வாங்கி வந்து
கூவி விற்றதுவும்
கருமைப் பசுவை காரிருளில்
அத்தளு வயல்வெளியில் தேடியலைந்ததுவும்
எல்லை அடி கூடியதால்
வாய் சண்டை கிளுவங்கதியால் ஏறி
ஆளுக்காள் முட்டி மோதியதுவும்
ஐ£திகள் இல்லையென்று
மேடை மேடையாய் பாரதி கவிதை சொல்லி
கிறுக்கனென்று எம் மக்கள்
முத்திரையிட்டதுவும்
ஆண்டுகள் ஓடி
வயதுகள் கூடி
கூனிக் குறுகிப் போனாலும் கூட
இன்னமும் பசுமையாய் உள்ளத்தில்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00