- நிர்வாணி
இன்று என் உடலுக்கு எடை கூடிவிட்டது
நீ என் இதயத்தில் குடியேறிவிட்டதால்
சிந்தனைகளின் எல்லைகள்
தகர்த்தெறியப்பட்டுவிட்டன
எண்ணங்கள் எல்லாம் நீயே என்பதால்
எனது பகலின் அளவு கூடிவிட்டது
ஏனெனில் இப்பொழுதெல்லாம்
இரவில் நான் நித்திரைகொள்வதில்லை
நாடித்துடிப்பு சராசா¤யைக் கடந்துவிட்டது
உனைக்காணும்போது இதயம்
தாறுமாறாய்த் துடிப்பதால்
ஒவ்வொரு நாளும் வந்து வந்து போ
உன் புன்னகைக்கொரு கவிதை
எழுதிவிட்டு அடுத்த உன் வருகைக்காக
காத்திருப்பேன்
நீ சிந்திவிட்டுப்போன புன்னகைகளின்
நினைவுகளோடு
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
காதலின் நினைப்பு கிறுக்கலாய் இருந்தாலும் அது ஒரு அழகிய கவிதைதான்.