வரிசையில் நிற்கிறார்கள் வாழ்வை தொலைக்கிறார்கள்!.. செஞ்சோலை மறக்கும் வரை ஓயாதீர் உறவுகளே!!

01.
வரிசையில் நிற்கிறார்கள்; வாழ்வை தொலைக்கிறார்கள்!
--------------------------------------------------------------------------------

'விடையிராதா
நீண்ட கேள்விகளால்
நிறைகிறது -
எதற்கெதற்காகவோ காத்திருக்கிற மனசு..

'நீண்ட பாலை நிலங்களில்
காய்ந்த புற்களை போல்
தொலைத்திட்ட ஆசைகள்
மரணத்தை மட்டும் மிச்சம் வைத்துக் கொண்டு
எல்லாவற்றிற்குமாகவும்; காத்திருக்கவே செய்கிறது..

'வருடத்தில் பூக்கும்
வளைகுடாவின் பசுமையை போலன்றியும்
வருடங்களிரண்டில் பார்த்து வந்த குடும்பத்து முகங்கள்
தூரத்தின் இடைவெளியில் -
சிக்கிக் கொண்ட பாரங்களாகவே கனக்கின்றன..

'எரிக்கும் வெயில்; வலிக்கும் குளிர்
கண் அடைக்கும் மனற் காற்று
எல்லாம் கடந்தும் -
உறவுகளின் நினைவுகளில் வலிக்கும்; வலி
தீர வதையன்றி வேறில்லை..

'சான்றிதழ் தூக்கிக் கொண்டு ஏறி இறங்கிய படிகள்,
வெளிநாட்டில் வேலை கிடைத்துவிட்டதென வெடித்துச் சிரித்த சிரிப்பு,
விமானத்திலிருந்து இறங்கிய பின் வாங்கிய முதல் சம்பளம்,
இவை எல்லாவற்றையும் ஈடுகட்ட
கண்ணீர்தான்
கண்ணீர்தான் மிச்சமாகுமென
அன்று தெரியவில்லை -

முடிகொட்டி
வாழ்க்கை மொட்டையாகி
கிழவனென்று பட்டம் சுமந்து ஊர்செல்கையில்
மிக நன்றாகவே தெரிகிறது;

'தெரிந்து மட்டுமென்ன செய்ய
அதோ எனை சுமந்து வந்த விமானம் திரும்பி செல்கையில்
இங்கிருந்து நிறைய பேரை -
ஏற்றிக் கொண்டு தான் செல்கிறது; அதே வதை நோக்கி!!

02.
செஞ்சோலை மறக்கும் வரை; ஓயாதீர் உறவுகளே!!
--------------------------------------------------------------------------

செஞ்சோலை தெருவெல்லாம்
புத்தகப்பையும் பிணமும் கனக்கிறதே;

தமிழ் படித்த சிறுமியின் குரல்
சப்தம் தொலைத்து கிடக்கிறதே;

பூத்துக்குலுங்கிய பிள்ளைகளெல்லாம்
மரண வாசலில் வீழ்ந்து துடிக்கிறதே;

மறக்க இயலா மரணச் சூட்டின் -
மண்டியிடவைத்து அவன் சுட்ட வெடி சப்தத்தின் -
சற்றும் மனிதம்பாரா எம் குலமழித்த வெறியில் -
முளைத்தெழு உறவுகளே;

அடிப்பவனை மன்னிக்கலாம்
அவனே திருப்பி அடிபானெனில் - திருப்பி அடித்தவனை
திருப்பி அடிக்கும் வரை
அவன் வருந்தி திருந்தும் வரை மன்னிக்காதே
மடையுடைத்த வெள்ளமென பொங்கியெழு உறவுகளே;

செத்தவன் செத்தவளெல்லாம் வெறும்
சுப்பனும் குப்பனுமல்ல;
எம் விடுதலையை 'உயிர்விடும் வரை காத்த வீரர்கள் -
அவர் உறைந்த மண்ணில் மீண்டும்
புடைசூழ் படையென திரண்டு நில் உறவுகளே;

தோளிலிட்ட மாலை வாடும் சூட்டிற்குமுன்
தாலி பறித்தவன் சிங்களவன் -
அவன் பொட்டில் அரைந்து சொல் - எம்
விடுதலை எத்தனை வலிதென்று; எம்
சுதந்திர தேசம் எம் லட்சியமென்று!

இணைந்து வாழும் வேடம் பூண்டு
இரந்து நிற்கும் கயவனின் கூட்டம்,

தூக்கிக் காட்டிய வெள்ளை கொடியை
தட்டிவிட்டு; சுட்ட அதர்ம வர்க்கம்,

இரண்டாம் தர இடம் தந்தே எமை
மரணம் வரை மண்டியிட செயும் மதப்பை
ஆணவத்தை -
தகர்த்தெறிய புறப்படு உறவுகளே;

உயிர் பறிக்கும் கழுகுகளுக்கு
குழந்தையின் கண்ணீரெப்படி புரியும்?

உயிர் பறித்து
ஆடை களைந்து
நிர்வாணம் ரசித்து
பிணத்தை புணரும் ஜாதிக்கு; புனிதம் எப்படி புரியும்?

உயிர்துடிப்பின் சப்தம் அடங்கும் முன்
உறவுகளை சுட்டெறிந்த வஞ்சகனுக்கு - நாம்
வாழ்ந்து படைத்த சரித்திரம் மண்ணெனப் பட்டதோ???

மாண்டவரெல்லாம் ஆண்டவரென்பதை
கத்தி கதறி ஓலமிட்டு மரணம் நெருங்கிய
ஒவ்வொரு பிஞ்சுகளின் அழுகையும் -
காற்றில் ஒலியில் காலத்தின் தலையெழுத்தினில்
எழுதிவிட்டே தன் இறுதி மூச்சினை நிறுத்தியிருக்குமென
வெகு விரைவில் பறக்கும் புலிக்கொடி
எதிரியின் செவிட்டில் அரைந்து சொல்லும்!

அன்று அடங்கும்
எம் வீரர்களின் -
அந்த செஞ்சோலை பிஞ்சுகளின் ஆத்மாக்கள்!

அதுவரை ஓயாதீர் உறவுகளே......

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-09-14 00:00
Share with others