உதவிக்கு வருவீர்களா ? என்றும்மை
உதவி கேட்டு நிற்போர்க்கு
இதோ வருகிறேன் என்றே கூறிவிட்டு,
இருந்த இடம் தொ¤யாமல்,
ஓடி ஒளித்துவிடும்
உத்தம மனிதர்களே!...
உம்மை நாடி உதவி கேட்பவர் யார்?
எண்ணிப் பாருங்களே !
அவர் யாருமில்லை உம் சோதரர்களே !
ஓடி ஒளிக்க வேண்டாம்
உதவிட முன் வாருங்கள்
இன்றைய நீங்கள் செய்யும் இவ்வுதவி
நாளை உங்களையும்
உங்கள் சந்ததியையும் வாழவைக்கும்
வரப்பிரசாதமாகி நின்று, காத்திருக்கும்
என்னும் உயர் எண்ணம்தனை
எண்ணித் தினம் மனதில் கொண்டால்,
உள் மனத்து, உண்மை நினைவுடன்
ஓடி ஓடி உதவிடவே
உள்மனம் தான் ஆசைப்படுமே !
நாடி நரம்பெல்லாம், நலிந்திங்கு கிடக்கையில்
ஆடித்திரிந்த, நல்ல நாட்களில்
ஓடித் திரிந்து நீர் செய்த உதவிகள்
தேடிவந்திங்கு, நம் துயர் துடைத்து விடும்
மறவாதீர், மகிழ்வுடன் உதவிடுவீர்..
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00