உப்புக் காற்றில்...

விட்ட இடத்திலிருந்து
தொட்டுப் பார்க்க
நினைக்கும் மனம்
இன்னும் மறக்கவில்லை
அந்த சோகத்தின் வடுக்களை...

கடற்கரை நண்டுகளெல்லாம்
காலை விறாண்டிக்கொண்டு ஓட
காலன் அள்ளிச் சென்று
காலாவதியாகிப்போன
அந்தக் கணங்களைத்
தேடிப்பார்த்த படி
அந்தத் தேசத்தின் சிறுசுகள்

சிறகடித்துப் பறந்து திரிந்து
சிறுமணல் வீடுகட்டி
சிந்தனையை வளர்க்க வேண்டிய
சின்னஞ் சிறுசுகளெல்லாம்
சுற்றிச் சுற்றித் தேடுகின்றன
காற்றின் இடமெல்லாம்
தம் பெற்றோர் விட்டுச் சென்ற
இறுதிச் சுவாசக் காற்றினை

கடற்கோளாய் வந்து
காலனாய் அள்ளிச் சென்ற
அந்தக் கடலை வெறித்துப்
பார்த்து வேதனிக்கும் மனங்களெல்லாம்
வெறும் உப்புக்காற்று
கொண்டு வந்து கொட்டிச் செல்லும்
வெள்ளை நுரையைத் தான்
கேட்க வேண்டும் தம் உறவுகளை...

புஷ்பா கிறிஸ்ரி
pushpa_christy@yahoo.com

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-02-20 00:00

கருத்துகள்

அந்த ஆழிப்பேரலையின்rnதாக்கத்தை மீண்டும் rnநினைவூட்டுகிறது .rnrnஏ கடலே rnஅள்ள அள்ள அளவில்லாமல்rnகொடுத்தவலேrnஎன்ன ஆனதடி உனக்குrnrnஉன்னை தாயென்றுrnதானடி சொன்னோம்rnஏனடி பேயானாய்rnபிஞ்சு உயிர் தின்னும்rnபிசாசு ஆனாய்rnrnஉன்னில்rnகாதல் கொண்டோம்rnகவிதை கொண்டோம்rnஅதனாலா இன்றுrnகண்ணீர் கொள்கிறோம்rnrnஏய் ... கடலே

Share with others