இருந்தும் இல்லாமல்
கண்களில் கண்ணீர் இருந்தது.
மனத்தில் சுமையும் இருந்தது.
கை கால்களில் பதட்டம் இருந்தது.
வயிற்றில் பசியும் இருந்தது..
கை ஏந்திக் கேட்க மனமும் இருந்தது..
தருவார்களோ என்ற ஏக்கம் இருந்தது..
தராவிட்டால் வெட்கம் என்ற
அவமான எண்ணமும் இருந்தது..
வயிறும் அழுது வடித்துக் கொண்டிருந்தது.
இத்தனை இருந்தும் கையில்
பணமிருக்கவில்லை.
மனத்தில் தைரியமிருக்கவில்லை
இறைவா இந்தப் பசியை
எதற்குப் படைத்தாய்?
எத்தனை ஓலங்கள்?
கேட்கவில்லையா உனக்கு?
ஓ.. உனக்குப் பசித்ததில்லையா?
ஏழைக்குப் பசிக்கிறதே!
என்ன செய்வது?
-புஷ்பா கிறிஸ்ரி
pushpa_christy@yahoo.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00