மன்னித்து விடு தாயே

இறந்தவள் உன் மகள் தான்
உன்னிடம் சொல்லிக்கொள்ள
என்னிடம் தைரியம் இல்லை
வயதான உன் மனம்
தாங்கிக்கொள்ளும் சக்தியை
இழந்து விட்டதால்
உன் உருவம் மாறியது போல்
உன் இதயம் மாறி
உன் நினைவுகள் மாறி
உன் கனவுகள், கற்பனைகள்
யாவுமே மாறி
நீ நிம்மதியற்ற உறக்கத்தில்
உழலும் போது,
என்றோ இறந்து போன
உன் சோதரன்
இன்று தான் இறந்தான் என்கிறாய்.
இன்று இறந்த உன்
மகளின் மரணமும் உன்னை
உருக்குலைப்பதை
நான் அனுமதிக்க விரும்பவில்லை
மரணம் வரும்வரை மயானத்தை
நினைத்து நீ
தினம் தினம் விடும்
கண்ணீர் போதும்..
மன்னித்துவிடு என்னை..
உன் மகளின் மரணத்தை
உன்னிடமிருந்து நான்
மறைத்து விட்டேன்...

(கலைப்) புஷ்பா கிறிஸ்ரி
pushpa_christy@yahoo.com

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-02-28 00:00
Share with others