மழை இரவின் கதை .

அறைக்குள் ஒளித்துக்
கொண்டிருக்கும்
இருள்
மெழுகுவர்த்தி ஒளியில்
அரை நிர்வாணமாகிறது
மெல்லியதாய் இசைத்துக்
கொண்டிருக்கும்
ஜமேக்கக் காதலனின்
பாடல்
எங்கிருந்தோ
அழும் குயிலின் ஏக்கம்
தனிவழியில் மழை இரவில்
கடந்துபோகும்
பெண்ணின் சோகம்
நட்சத்திரங்களைத்
தொலைத்ததில்
அழுது வடியும் வானம்
இருளைக்கிளித்து
உறுமிப்போகும்
இடியும் மின்னலும்
பனிப்புகாரும் காற்றும்
திசைதெரியாது அலைந்த
இப்படியான
இரவொன்றில்தான்
மழை இரவின்
காதல் கதை முடிந்துபோனது

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-10-21 00:00
Share with others