கவிதைத் தீவு..

ஆகாயமாக
விரிந்து கிடக்கும்
கடலின்னலை தாலாட்ட

தென்னை மரக்கீற்றடியில்
பஞ்சுமணல் தரையில்
பறவைகள் துயிலெளுப்ப
ஒருபொழுதேனும்
கண்விழிக்கவேண்டும் .... ....

எமை இணைத்த விடுதலை
உலகெங்குமாய் விரிய

இயற்கையைத் தின்று
சூரியன் சுட்டெரிக்கும்வரை
அங்கேயே கிடப்போம்
பலகதைகள் பேசி

உன்னை நான் கவிதையாக்க
என்னை நீ ஓவியமாக்கு
எம் கனவுகளை நிஜமாக்கும்
அந்த அழகிய தீவு .

-- றஞ்சினி

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-01-27 00:00
Share with others