உரையாடல்களின்....
-----------------------------

பரப்பிய தாள்களாய்
அறையெங்கும்
கலைந்து கிடக்கிறது
அன்றைய உரையாடல்
கலவியில் கிறங்கிய
பொழுதுகள்போல
மயங்கிக்கிடக்கும்
உடலையும்
தாகத்துடன்
வார்த்தைகளுக்காய்
அலையும்
என் கவிதையையும்
வெற்றுத்தாளின்
வேதனையையும்
என்னையும்
உணரமுடியுமா
உன்னால்

-றஞ்சினி

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-19 00:00

கருத்துகள்

உங்கள் கவிதை ஒரு அருமையான மொழிபெயர்ப்புக் கவிதையை படித்த திருப்தியைத்தருகிறது

பெண்மையின் இருப்பின் வலி அழகாக பதிவாகியுள்ளது. ஆழமான மனஅதிர்வுகளை தரக்கூடிய ஆற்றல் படைத்த உங்கள் எழுதுபோல் இன்னும் கொஞ்ச தூரம் கவிதைக்குள் பயணித்திருக்கலாம். வாழ்த்துக்கள்.

அன்புடன் டீன்கபூர் சு.சிவா
இருவரது விமர்சனத்திற்க்கு எனது நன்றியும் அன்பும் .
அன்புடன்
றஞ்சினி

Share with others