எதுவும் நடக்கலாம் என்றாகிப்போன...
பயத்துடனான முகங்கள்
நிறைந்த தேசத்தில்
விலங்குகளின்
நடமாட்டமும்
குறைந்தே இருந்தது
நேற்றுவரை இருத்தலுக்காக
குரலை உயர்த்தியவள்/ன்
இன்று வீதியில்
இறந்து கிடக்கிறாள்/ன்
பாடசாலை மாணவியிலிருந்து
வீட்டிலிருக்கும் தாய்வரை
எப்பவும் நடக்கிறது, நடக்கலாம்,
ஒரு ஆயுதம் வாங்குவது
பட்டினியால் இறக்கும்
உயிர்களை விட
அவசியமாகிறது இவர்களுக்கு
அதிகாரங்களில் மனிதர்கள்
இன்மையால்
மனித உரிமைகள்
பறிபோன தேசத்தில்
ஆயுதங்களும் பொய்களும்
சுதந்திரமாகவே உலாவித்திரிகின்றன.
--றஞ்சினி
கருத்துகள்
றஞ்சனியின் கவிதைகள் குறிப்பாக புலம்பெயர் தளத்திலும் பெண்ணியத்தளத்திலும் இருந்து கிளம்புகிறது. றஞ்சனி போன்றவர்களின் குரல்கள் நிலத்துக்கம் புலத்திற்குமான நெருக்கத்தை உண்டுபண்ணகிறது. "நாம் நாமாக" என்ற கவிதை வாழ்வின் மிகப்பெரிய வெளியின் குரலாக இருக்கிறது. எமக்காக இந்த உலகம் விரியட்டும் நீ என்னிடத்தில் இருக்கும்போது ஆணாக இராதே என்னை நீயாக மாற்ற முயலாதே நான் நானாகவும் நீ நீயாகவும் இருப்போம் எமக்கு இப்போது பலம் என்ற வரிகளை குறிப்பிடலாம். கூடுதலாக சிறுசிறு தெரிப்புகளாக அடித்துச் செல்கிறது. "எதுவும் நடக்கலாம் என்றாகிப்போன..." "பயத்துடனான முகங்கள் நிறைந்த தேசத்தில் விலங்குகளின் நடமாட்டமும் குறைந்தே இருந்தது இது எல்லோரும் சொல்ல முற்படுகிற விடயம் தான்... ஒரு ஆயுதம் வாங்குவது பட்டினியால் இறக்கும் உயிர்களை விட அவசியமாகிறது இவர்களுக்கு அதிகாரங்களில் மனிதர்கள் இன்மையால் மனித உரிமைகள் பறிபோன தேசத்தில் ஆயுதங்களும் பொய்களும் சுதந்திரமாகவே உலாவித்திரிகின்றன. கவித்துவம் குறைந்த கருத்தவசியமிக்க வரிகள்.. காதல் கவிதைகள் கூட தமிழில் இவ்வாறான துணிச்சலான காதல் கவிதைகளின் வரவு மிக அரிதாகவே இருக்கின்றது. அறிவுரிமையின் பாசாங்குத்தனம் இல்லை. விடுதலை....என்று செ.க.சித்தன்ஸ கூறுவது போல தீவிரதன்மை காட்டுகிறது. அது ஏக்கத்துடன் கோபத்துடனும் தகிப்பதையும் காணலாம் "ஆசைகள் நிஜமாகும் பொழுதுகளை தேடியே போகிறது நாட்களும் வயதும்.. எனதான நீ எங்கேயோ....... தேடுகிறேன் நினைவுகளில் காத்திரு என்றாவது சொல்லேன் வண்ணங்களில் ஏனென்று தெரியாத உன் மெளனத்தில் அணைந்து கொண்டிருக்கிறது என் காதல் தீ " என்ற இது போன் சிறிய கவிதைகளில் சொற்களை இறுக்கி எழுதியிருக்கிறார். யாருடனும் பேசவேண்டும்போல் இல்லை எதைப்பற்றியும் அறியவோ சிந்திக்கவோ ஆசையும் இல்லை போர்வையின் கணகணப்பான அணைப்பிலிருந்து உடல் அசைய மறுக்கிறது மனதின் வெளிகளை ஆட்டும் வரிகளும் உள்ளன. றஞ்சனியின் கவிதைகள் கூடுதலாக முன் தளத்தில் வருவதாக படுகிறது. ஈழத்தில் தற்போது எழுதத்தொடங்கிய பிரமிளா செல்வராஜாவின் கவிதைகளும் இப்படியான வரவுத்தன்மையை காட்டியது. பின்னர் அவர் எழுதுவதைநிறுத்திவிட்டார் போலிருக்கிறது. சங்கரி, சிவரமணி,கஸ்தூரி, அனார், அம்புலி போன்ற ஈழப்பெண்கவிஞர்களுடன் ஓப்பிடுகையில் றஞசினியின் கவிதைகள் செல்ல வேண்டிய பரப்புகள் உள்ளனவாக இருக்கிறது.என நினைக்கிறேன்.
கவிதை மிக அருமை.பாராட்டுக்கள். 0094 072 4679690