எத்தனை மரங்கள் ?
அமைதியாகக் காத்து நிற்கின்றன
இன்னும் எவர் வருவார்கள் ?
எவர் போவார்கள் என்ற எதிர்பார்ப்புகளுடன்
எத்தனை உடல்கள்
அந்த மரங்களின் நிழலில்
நித்தியமாய் நித்திரை கொள்ள
வந்து கொண்டிருக்கின்றன ?
ஆண்டாண்டு காலமாக
வம்சப் பெயர் கூறிடும்
எத்தனை பெயர்ப்பலகைகள்
அந்த மரநிழலில்
மயானத்து மௌனத்தையும்
மனிதர்களின் மௌனத்தையும்
ஒன்றாக்கி வைத்துத் தான்
அந்த இலைகளின் நர்த்தனமோ ?
மூன்றே மாதங்களில் சலசலத்துவிட்டு
மௌனப் பாசை பேசயே
மனிதர்களின் இறுதிப் பயணப்
பாசை பேச எண்ணிடும் மரங்களே
எத்தனை காலம் போனாலும்
எத்தனை மனிதர்கள் வந்தாலும்
அத்தனை மனிதர்களும் உன்னிடம்
எத்தனை சொந்தமாய் போவார்களோ ?
வண்ணக்கலவையால் வசந்தம் பேசி
கண்ணைக் கவர்ந்துவிட்டு
எண்ணியபொழுது மூன்றே மாதங்களில்
விண்ணைப் பார்த்திடும் வெறும் அலக்குகள்
சலனமற்ற மனித வாழ்வுகள்
சங்கமித்த இவ்விடத்தில்
சரித்திரம் படைத்திடும் சாகா மனிதர்களாய்
மரங்களே நீங்கள் மாளாத மரங்களே!
மயானத்தில் இருக்கும் மரங்களின் எண்ணங்களை புகைப்படம் பிடிப்பது போல அழகான வரிகள்,.rnrn- சகோதரன் ஜெகதீஸ்வரன்.