01.
பிச்சை
------------
பிச்சைக்காரர்களுக்கோ
போர்
இடப்பெயர்வு
ஊனம்
இயலாமை
கந்தலுடை மனைவி
பசியோடிருக்கும் மகன்
பருவமெய்திய ஏழாவது மகளென
ஆயிரம் காரணங்கள்
பிச்சையெடுக்க
நடத்துநர்களுக்கோ
ஒன்றே ஒன்று தான்
“சில்லறையில்லை”
02.
கற்பிழந்த கதை
-----------------------
விடுமுறையில் கூட
வேலைக்குச் சென்றாய்...
உணவருந்தா விட்டாலும்
உதட்டுச் சாயம் பூசினாய்
அம்மாவுடன் சண்டைபிடித்து
அலங்கோலமாய் ஆடையணிந்தாய்
காலம் தாழ்த்தி
வீடு வந்து கோயிலென்றாய்
கண்டிக்கும் போதெல்லாம்
யாரோ அண்ணண்களோடு
ஒப்பிட்டாய்
ஆண்நட்பு, பெண்ணுரிமை
அத்தனையும் பேசிய நீ
அதையும் கூறிவிட்டல்லாவா
அணைந்திருக்க வேண்டும்
அதான்,
“நீ கற்பிழந்ததையும் - உன்
கடவுள் கைவிட்டதையும்”
03.
“அடிமைகளின் சாதனைகள்”
-----------------------------------------
பெரும்பாண்மையான காலங்களில்
நாம் அடிமைப் படுத்தப் பட்டிருக்கின்றோம்
பெரும்பாண்மையினரால்...
உணர்வுகள்
ஒடுங்குமளவிற்கான அடிகள்
உள்ளும் புறமும்
இருப்பினும்...
இருப்பினும்...
மார் தட்டிக் கூறுவேன்..
மனித உரிமைக்காய் முழங்கும்
எம்மினத்தால் தான்
ஊருக்கு ஒதுக்குப் புறமாய்
இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது
“இரட்டைச் சுடுகாடு”
கருத்துகள்
நன்றி தோழர்,rnrnகற்பிழந்த கதைக்கான வாதமும், எதிர்வாதமும் முகப்புத்தகத்தில் இடம்பெற்றது... மேலும் வினையும் எதிவினையும் எனும் தலைப்பில் என் தரப்பு நியாயங்களை என் வலைப்பூவில் பதிந்திருந்தேன்... rnrnவிரும்பினால் நீங்கள் முகப்புத்த்கத்தின் ஊடாகவும் வலையிலும் படிக்கலாம்.rnrnநன்றிகள்rnமன்னார் அமுதன்
'பிச்சை' சரியான நெற்றியடி! 'கற்பிழந்த கதை' எனக்குப் புரியவில்லை. இரட்டைச் சுடுகாடு பற்றிய கவிதை சுடுகவிதை!