பகலா இரவா புரியாத காலநிலை
எப்போதுமின்றி
என்வீட்டு மரங்கள் வெறுப்பை தருகிறது
இதயம் விட்டு விட்டு அடிக்கிறது
என்னை அந்தரத்தில்
தவிக்க வைத்து தாலாட்டு கேட்கிறது

சில மணித்தியால சலனங்கள்
தொ¤ந்தும் ஏன் இப்படி தவிக்கிறது மனம்

ஆசையாய் உன்னை முத்தமிட முடியாது
அன்பாய் உன்னை வருட முடியாது
காதலாய் உன்னை அணைக்கவும் முடியாது
ஆயிரம் தடைகள் சம்பிரதாயங்கள்

அவனுக்கும் இப்படித்தான் இருக்குமா
இருக்க வேண்டுமென்கிறது மனம் ஆசையாக

என் உணர்வுகளே உங்களுக்கு !
மதிக்கத்தான் நினைக்கிறேன் முடிவதில்லை
எப்போதும்
அறிவாக நினைத்தால் சி£¤ப்புத்தான் வருகிறது
அறிவாக நினைக்க மனம் அனுமதிக்கப்
போவதுமில்லை இப்போ.
காதலே ! திரும்பத்திரும்ப உனது அடிமையாக
இன்னும் எத்தனை காலம்தான் நான்..

வயது வரம்புகள்
எப்போ எங்கு யாருடன் என்றெல்லாம்
பார்க்காது
வினோதமான உறவுகளை எப்போதும்
விதைத்த படி நீ.
உதறிவிட்டு போனாலும் தொடர்கிறாய்
என்னுடனே
கொன்றுவிட்டு வாழவும் முடிவதில்லை என்னால்

என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய.

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00

கருத்துகள்

காதலின் வீரியத்தையும் தமக்குள்ள கட்டுப்பாட்டையும் தெளிவாகவும் காதலோடு
கூறியதில் அருமையே !

எழுத்தாளர் அவர்களுக்கு!

காதல் மனம், என்றுமே அறிவின் பேச்சை கேட்பதில்லை தான்...
"அறிவா... ? இல்லை உள்ளத்தின் உணர்வுகளா...?" என்ற விவாதம் வரும் போது, இந்த உள்ளமானது எப்போதுமே வாகை சூடி விடிகிறது.... ஒரே ஒரு விசயத்தில்!
ஆம்! அது காதலின் விசமத்தில்!!. உங்களின் உணர்வு ஆமோதிக்கப்படுகிறது!
உங்களின் கதாபாத்திரம் தவிப்பது போல உண்மையில் ஆண் மனமும், பெண்மையின் மனம் போல கரைந்து தான் போகிறது! இந்த காதலின் ஸ்பரிசங்களில்!! தொடர்ந்து உணர்வுகளை பதிவு செய்யுங்கள்!

- எழுத்துக்களை எதிர்பார்த்து,
- ரஞ்சினிமைந்தன்,
கணக்கம்பாளையம், திருப்பூர்.

அன்புடன் அன்பு ,ரஞ்சினிமைந்தன்.
உங்கள் இருவரின் விமர்சனத்திற்க்கும்
நன்றிகள்..

அன்புடன் றஞ்சினி

காதலே என்ன செய்ய' ற்ஞ்னியின் கவிதை காதலை வெறுப்பவர்களையும் காதல் மீது காதல் கொள்ள வைக்கும்
- அன்பின் நாயகன்.

மிகவும் நல்ல கவிதை

உண்மையான வரிகள். உணர்வு நன்றாக சித்தரிக்கப்படுகின்றது. மொத்தத்தில் நல்ல கவிதை. வாழ்க! வளர்க! - அகணி

akila on 2010-04-06 00:00

எபொழுதும் என்த வயதிலும் என்பது நிதர்சனமான உன்மை

கவிதைகளுக்கு கருத்துச்சொன்ன அனைவருக்கும் அன்பும் நன்றிகளும். ..rnrnஅன்புடன் றஞ்சினி.

கவிதை எனக்கு பிடித்துக்கொண்டது. பெண்ணின் உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

Share with others