காக்கைகள்
கண்ணாடிக் கதவுகள் திறந்து
கவளம் வைக்கிறேன்
ஓரக்கண்ணால் பார்ப்பவைகளின்
கண்களில் மின்னுகிறது-கண்ணி பயம்
ஒருக் கொத்தோடு பறந்து
தூரப் போய்விடுகின்றன..
இருக்கலாம்-நஞ்சு குறித்த சந்தேகங்களும்
கதவுகளை சாத்துகிறேன் இறுக்கமாய்,
அறைக்குள் வந்துவிடக்கூடும்
காகங்கள் என..
பரஸ்பர நம்பிக்கையின்றிப் பழகுகிறோம்
நானும்
மாநகரக் காக்கைகளும்.*
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-31 00:00
கருத்துகள்
vanakkam rasigan! thangalin oruvan muditha kathai thodarkathai aanaalum thangalin kavithai kangalin kanneer paaichugirathu! manathai madiya vaikkirathu! aval ninaivugal unmaiyaanaal antha ninaivai vaithu kavithaiyodu mattume poraadungal! innum ethanayo porgal kaathirukkindrana! vaazhkkai kalathil! atharkum aayuthangali thayaar seithu vaithukkollungal! poraattam thaane vaazhkkai!
அழகான கவிதை.