இசைக்கலவை
சிக்கித்தவித்ததொரு வாத்தியம்
இசையறியாப் பாமரனின் அதிகாரப்பாதுகாப்பில்
விதியின் விளையாட்டாய்
உள் லயம் புரியா சிறைமை வெம்பி
வறண்டு காயத்தொடங்கின இசையின் ஊற்றுக்கண்கள்
தீண்டியதொரு ரசி கரம்
நவீனத் திசையொன்றிலிருந்து
மாந்திரீக வசீகரத்துடன்
விரல்தொட அதிரும் மிரு தங்கம்
மீட்டலில் சிலிர்க்கும் வீணையாய்
மூச்சுக்கார்றில் வேய்ங்குழலின் வெப்பம்
மத்தள முரசங்களாய் உணர்ந்த தருணங்களுமுண்டு
நாவுக்குள் நா உரச மோர்சிங்
உதடு பொருத்தி உருக
உதட்டார்கனின் ரீங்காரம்
கொங்களில் சங்கூதும் குறும்பனின்
வித்தக ஸ்பரிச லாவகம்
ஒற்றா உடலில் எழும்பிச் சுழல்கிறது
இசைக்கலவை.
தீ மூட்டி சென்றுவிட தினந்தோறும் எரிய
சிதையிலிருந்து பறக்கின்றன
இசைத்துணுக்குகள் இச்சை சுமந்து.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-02-28 00:00