சொந்தங்களிடமான சொந்தம்

மு. பழனியப்பன்

சொந்தங்கள் எரிச்சலைத் தருகின்றன

விசயம் கேட்கும் காதுகள்
கூர்ந்து நோக்கும் கண்கள்
எப்போது சிரிக்கலாம் என நம்
சருக்கலை எதிர்பார்த்து நிற்கும் குரோத மனம்

தான் மட்டுமே உயர்வு
மற்று எவர் செய்தாலும் சரியே இல்லை
எனப் பேசும் பொறமைக் குணம்

இவர்களை நம்பி செய்யாமல் இருக்கவும்
முடியாது
செய்தும் தொலைக்க முடியாது

என்ன செய்வது
இவர்களுடான பந்தம்
பாதியில் நின்றுவிடக் கூடாதே

சொல்லியும் சொல்லாமலும்
விசேஷத்தை முடித்துவிட்டோம்
இனி அவர்கள் விசேஷம் வரும்
அதுபோது நாம் வைத்துக் கொள்வோம்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-05-24 00:00
Share with others