சொல்லி மாள்வதில்லை
மு. பழனியப்பன்
தாத்தா இறந்து
பல நாள்கள் ஆகின்றன
அவர் இறப்பின்
துக்கத்தின்
கடைசி நிமிடங்கள்
சந்திக்க இயலாதாயின
அதனால்
அவர் இன்னும்
இருப்பதாக
மனம் எண்ணுகிறது
அவர்
சொல்லித்தந்தது
பல
நல்ல விசயங்கள்
விருந்துக்கு
அழைத்துப்போவார்
வேண்டுவன
குறைவன
பார்த்து
விருந்தை ருசிக்கக்
கற்றுத் தந்தார்
இலையில்
மிச்சம் மீதி
குறைவின்றி
முழுமையாக்கும்
பழக்கம் அவரிடம்
இருந்து பெற்றதே
இன்னும் பல
நினைவு கூர்வார்
என் அப்பா
அவருக்கு
மச்சினன் முறை
அதனால்
அவரின் சிறு வயதுக்
கன்னங்களைக்
கடித்து மகிழ்ந்தது கூறுவார்.
என் அப்பா
அவரின் மருமகன் ஆனது
அடுத்த நிகழ்வு
தபால் நிலையத்தில்
சண்டை போட்ட விசயம் சொல்வார்.
வங்கியில்
வேலை பார்த்தவர்
இப்போதைய வங்கிப் பணியாளர்களின்
மீது
நம்பிக்கை கொள்ளாதவர்
சேர்த்து வைக்கப் பழகியவர்
அது தனக்கல்ல
என தன்னைச் சுருக்கிக் கொண்டவர்
மகன்கள் இப்போது பெருக்கிக் கொண்டிருக்கிறhர்கள்
மகளுக்கு ஒன்றும் சேர்க்கவில்லை
என்ற நினைப்பில் உறுதியாய் நின்றவர்
கடைசி காலணுகளில்
தன் துணை இழந்து
உணவிற்கு
பிறர் கரம் நோக்க வேண்டிய
துயரம் ஆறாது
மனைவியின் அருமை
அப்போது மட்டுமே உணர்ந்தவர்
இறப்பின்
மிச்சங்கள்
அவரின் கைப்பிடி
அறுந்துபோன பெட்டியில்¢
இருந்ததாய் அம்மா சொன்னாள்
வங்கியின் நிரந்தர வைப்புகள்
மகன்கள் பெயரில்
கெட்டியாய்
சாகும் வரை காப்பாற்றியது அதுமட்டுமே
இன்னும் இருக்கிறார்
இருபது வருடங்களுக்கு
நிரந்தர வைப்பின்
கால அளவு அது வரை
உள்ளதே
Mannidalblogspot.com
muppalam2003@yahoo.co.in
palaniappan