குரல்கள்
மு, பழனியப்பன்
குரல்கள் மாறிப் போகின்றன
அரசியல்வாதிக்கு ஒருகுரல்
மேடைப்பாடகனுக்கு ஒன்று
இலக்கியவாதிக்கு ஒன்று
பட்டிமன்ற நடுவருக்கு ஒன்று
கணவனுக்கு ஒன்று
மனைவிக்கு ஒன்று
பிள்ளைக்கு ஒனறு
எனக் குரல்களில் பல மாற்றங்கள் உண்டு
குரல்கள் தடிப்பு
ஏறிப்போய்
கரகரத்து
விலைக்காக
வேளைக்கொன்றாகப்
பேசும்
எதிராளியைச் சொறிந்துவிடும்
ஆணுக்கொரு குரல்
பெண்ணுக்கு ஒருகுரல்
குழந்தைக்கு ஒன்று
இளைஞனுக்கு உடைந்த குரல்
ஆண்குரல் பெண்ணுக்கு இருந்தாலும்
பெண்குரல் ஆணுக்கு இருந்தாலும்
குரல்பேதம்
தெளிவாய்க் காட்டிக் கொடுத்துவிடும்
போராட்டக்குரல்
சண்டைக்குரல்
மௌனக்குரல்
கலகக்குரல்
கேலிக்குரல்
அடிமைக்குரல்
அன்புக் குரல்
ஆசைக்குரல்
இன்பக்குரல்
துன்பக்குரல்
கேட்ட குரல்
கேட்காத குரல்
இவை எல்லாவற்றுக்கும்
தனித் தனி முத்திரை உண்டு
உண்மைக்குரல்
ஒலிபெருக்கிக்குரல்
வானொலிக்குரல்
தொலைக்காட்சிக்குரல்
திரைப்படக்குரல்
இத்தனைக்கும் வேறுபாடுண்டு
நூலிலை
குரல் வித்தியாசம் கூட
விபரீதத்தை உண்டாக்கிவிடலாம்
கணவனது குரல் என
ஏமாந்து கள்வனின் குரல் அதுவாகலாம்
குழந்தையின் குரல் இது
என வேறுகுரலுக்குப் பால்சுரக்கலாம்
மனைவியின் குரல் இது என
மயக்கம் கொள்ளலாம்
மனைவியின் குரலில் காதலியைத் தேடலாம்,
காதலன் குரலில் கணவனைக் காணலாம்
குரல் பேதம்
குறிப்பிடத் தக்கதே
palaniappan