மறுபடியும் பூக்கும்

மறுபடியும் பூக்கும் எனது தொட்டிச் செடி
இன்றில்லாவிடில் நாளை
மறுநாள் அதற்கும் பின்னாளில்
நிச்சயமாய்ப் பூக்கும்

மறக்கவியலாது
தினம் மலர்ந்து சுகந்தம் பரவிய நாட்களை
என்னாலும் செடியாலும்
இன்றும் மணக்கிறதெனக்குள்

நல்லதொரு தோட்டக்காரனாய் நானில்லாததை
மவுனத்தால் உணர்த்தி
முட்களால் குத்தும் சிலநேரம்
வேர் பாவியிருப்பதென்னவோ
வீர்யமிக்க காதலில்

காலத்தின் மெல்லிய சுழற்சியில் மாறு மெல்லாம்
மாற்றங்களோடு பூக்கும் மறுபடியும்
என் செடி எனக்காக.

-- அன்பாதவன்
jpashivammumbai@rediff.com

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-11-16 00:00
Share with others