Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

தலைப்பில்லாத என் கவிதை

- நாச்சியாதீவு பர்வீன், இலங்கை

தலைப்பில்லாத என் கவிதை
-----------------------------------

உயிரின் நிழலில்
கசிந்து உருகும்
காதல் விழிகள்
எங்கு சென்றதுவோ..

வழிகள் தோறும்
காதல் கொடிகள்
விரிந்து கிடக்கும்
ஞாபக வெளியில்..

இதயம் முழுக்க
சுகந்தம் பரவும்
இனிய நாட்கள்
இனிமேல் வருமா?

கைகள் கோர்த்து
கடற்கரை மணலில்
கவிதை படித்து
நடந்த நாட்கள்..

புல்வெளி தோறும்
அமர்ந்த படியே..
திட்டம் போட்டோம்
வாழ்க்கை பற்றி...

மழையில் நனைந்து
இன்பம் நுகர்ந்தோம்.
மாலைதோறும்
சேர்ந்தே திரிந்தோம்..

பட்டுப் பூச்சி
போல நாமும்
சுற்றித்திரிந்தோம்..
சுகமாய் வாழ்ந்தோம்.

யாரின் கண்கள்
நம்மைச்சுட்டது
காதல் கொடிகள்
அறுந்து விட்டது.

ஊரின் நினைவுகள்
உரசும் போதுகளில்
காதல் மனசும்
கண்ணீர் விடும்..

சோகம் நெஞ்சை
துளைக்கும் எனினும்..
தேம்பி அழத்தான்
மனசு துடிக்கும்.

காலக் கதவை
திறந்து பார்த்தால்
கண்ணீர் ததும்பும்.
காதல் கதைகள்..
எனதை உனதை
நமதைப் போல..
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-03-15


அமுதன்

16 years 8 months ago

அருமையான கவிதை அண்ணா. வார்ப்பில் அது இன்னும் அழகாக உள்ளது

இராமசாமி ரமேஷ்

15 years 10 months ago

நாச்சியாதீவு பர்வீன் என்ற படைப்பாளி இன்றைக்கு நேற்றைக்கு இலக்கியங்களைப் படைப்பவர் இல்லை. இவர் பல காலங்களாக இலக்கித்தோடு வசித்துவருபவர். இவருடைய கவிதைக்கு கருத்து எழுதும் அறிவு என்னிடம் இல்லை. இருப்பினும் அழகான கவிதையை நமக்கு தந்தமைக்காய் அவரைப் பாராட்ட மனும் நாடுகிறது. எனவேதான் இந்த சிறுகருத்தை கிறுக்குகிறேன். தமிழை வளர்ப்பதில் இன்று இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர்களைவிட முஸ்லீம் படைப்பாளிகளே அதிகம் ஈடுபாடு காட்டி உழைக்கிறார்கள். அந்தவகையில் பல இலக்கியவாதிகளுக்கு முன்னோடியாகத் திகழும் நாச்சியாதீவு பர்வீண் அவர்களை நான் மனதார வாழ்த்துவதோடு தொடர்ந்தும் எமக்காக பல படைப்புக்களை அவர் தரவேண்டும் எனவும் வேண்டுகிறேன்.rn rn இராமசாமி ரமேஷ்rn அளம்பில் முல்லைத்தீவு.

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • நீ பற்றிய நினைவுகள்.
  • நீ என் குழந்தை
  • மூன்றாவது இதயம்
  • மரணத்தின் வாசல்.. மனசு முழுக்க
  • மனவெளியின்.. காலத்தின் போர்வை
  • புள்ளிகளும் கோடுகளும்
  • சம்மதமில்லாத மவுனங்கள்.. கவலை..
  • என் மரணம்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube