Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

மனவெளியின்.. காலத்தின் போர்வை

- நாச்சியாதீவு பர்வீன், இலங்கை

மனவெளியின் பிரதி.. காலத்தின் போர்வை

01.
மனவெளியின் பிரதி
------------------------------------

வானவெளி உடைவுகளுக்குள்
அடைகாத்த கனவுகள்
குஞ்சுகள் பொறித்து
குதுகலமாக வெளியேறிய
சிதைவடைந்த நாட்களாக
இன்றைகள் ஆகிப் போயின

நறுமனமிழந்த பூக்களை
கொறித்து துப்பி
அணில் வேடமிட்ட
ஆலாக்களின் கால்களில்
காலத்தின் சாவிகள்
தொங்குவதை சகிக்க முடியவில்லை

மரங்களின்
நிழல் தேடி அலையும்
ஒரு மைனாகுஞ்சி போல
மனம் அலைந்து அழுகிறது

தும்பி பிடிக்க
தூண்டில் இட்டு
வண்ணத்திப் பூச்சிகளை
வேட்டையாடும் அரசியல்
யாருக்குத் தெரியும்

கெட்ட கனவாய்
மறந்து எல்லாம்
ஒன்றுமில்லை என்று
நினைக்க
என் நொண்டிக் கனவுகளுக்கு
கால்கள் இல்லை
என்னை விட்டு ஓடிவிட.



02.
காலத்தின் போர்வை
----------------------------------------

வேகம் குறைந்த
காற்றின் வெப்பம்
உஷ்ணம் அருந்தி பயணப்படுகிறது

ஒன்றுமே இல்லாத ஒன்றின்
உந்துதல்
நம்பிக்கை மீதான
எதிர்பார்ப்பை விதைக்கிறது

உறங்காத உலகத்தின்
உறங்கும் மனிதர்களில்
அநேகருக்கு நிம்மதி
இதயத்திலில்லை ...

வெறும் சமாதனச்சிரிப்பில்
காலம் நகர்த்தும்
மண்புழு வாழ்க்கை
இவர்களில் யாரும் சந்தோஷமாக இல்லை

காலத்தின் போர்வைக்குள்
ஒரு போர்க் குற்றவாளியாக
இன்னும் எதற்காக
இவர்களின்...ஜீவித நீடிப்பு
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-02-04


இ.பு.ஞானப்பிரகாசன்

15 years 9 months ago

உள்ளத்தைக் கனமூட்டும் கவிதைகள்!rnஇலக்கியரீதியாகவும் மிகவும் கனமான கவிதைகள்!rnபுரிந்து கொள்ளக் கூடிய, அதே நேரம் இலக்கியத்தனம் மிகுந்த கவிதைகள்!rnஇவரைப் பாராட்டும் அளவுக்கு இன்னும் நான் வளரவில்லை.rnrn-இ.பு.ஞானப்பிரகாசன்.rn[கவிஞர் எண் 568]

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • நீ பற்றிய நினைவுகள்.
  • நீ என் குழந்தை
  • மூன்றாவது இதயம்
  • தலைப்பில்லாத என் கவிதை
  • மரணத்தின் வாசல்.. மனசு முழுக்க
  • புள்ளிகளும் கோடுகளும்
  • சம்மதமில்லாத மவுனங்கள்.. கவலை..
  • என் மரணம்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube