Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

மரணத்தின் வாசல்.. மனசு முழுக்க

- நாச்சியாதீவு பர்வீன், இலங்கை

மரணத்தின் வாசல்.. மனசு முழுக்க காதல்

01.
மரணத்தின் வாசல்..
------------------------

காலச் சக்கரம்
நினைத்தபடி ஓடும்

நாம் நினைக்காத
ஒரு பொழுதில்
திடீரென்று நின்று..
தன் வாசல் திறந்து.
விரும்பியவரை
இழுத்துக்கொள்ளும்
மரணம்..

அது ஆணாக..
பெண்ணாக.
இன்னும் குழந்தையாக
என்று..
யாராகவும் இருக்கலாம்

ஒரு பெருமூச்சி தானும்
விட அவகாசம்
கிடைக்காத தருணமது

எந்த விருப்பமும்
எந்த வெறுப்பும்
நம்மை ...
திருப்பி கொண்டு வர மாட்டா.
மரணத்தின் வாசலை கடந்த பின்..


02.
மனசு முழுக்க காதல்
--------------------------

காதல் வந்திரிச்சி
எனக்கு காதல் வந்திருச்சி
ஊர் சுற்றி திரிந்த
எனக்கு ........
உருப்படி இல்லாத
எனக்கு...
யார் கண்பட்டதோ..
காதல் வந்திருச்சி

நிலவை நான்
ரசிக்கவில்லை..
நீல வானம்
விருப்பமில்லை..
கோல மயிலின் இறகை
என்றும்..புத்தகத்தினுள்
வைக்கவில்லை
காதல் என்ற பெயரில்
எங்கும் நான்...
கால் கடுக்க அலைந்ததில்லை.
இருந்தும்..
காதல் வந்திரிச்சி
எனக்கு காதல் வந்திருச்சி

யாருவிட்ட சாபமோ..
எனக்குள் காதல்
வந்திரிச்சி

நீல வானம்
அதில் நீந்து மேகம்
காதல் சுமந்த காற்று
காலைநேர பனித்துளி
இலையருகே பூக்கள்
இத்தியாதி...இத்தியாதி....

எல்லாம் ரசிக்கிறேன்
இப்போது எல்லாம் ரசிக்கின்றேன்

ஓடும் நதியிலே
என் காதல் நீந்துது
ஓலமிடும் கடலிலும்
என்காதல் வாழுது..
காரணம் ...
காதல் வந்திரிச்சி
எனக்கு காதல் வந்திருச்சி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-07-14


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • நீ பற்றிய நினைவுகள்.
  • நீ என் குழந்தை
  • மூன்றாவது இதயம்
  • தலைப்பில்லாத என் கவிதை
  • மனவெளியின்.. காலத்தின் போர்வை
  • புள்ளிகளும் கோடுகளும்
  • சம்மதமில்லாத மவுனங்கள்.. கவலை..
  • என் மரணம்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube