வெளிச்சத்தில் நின்ற உருவமாய்
நிழல்கள் துப்பி திசைகள்தேடி
விரிந்தும் நெழிந்தும்
வெளிச்சத்தில் கரைந்துவிடாமல்
இருப்பதற்காய் முயன்றுகொண்டிருந்தேன்
முடியவில்லை
உச்சியில் வெளிச்சம் அடித்துவிட்டால்
கரைந்துவிடும் நிழல்கள்
குடைக்குள் ஒளிந்துகொண்டேன்
என்னை மீட்டெடுக்க நீங்கள்
வராதீர்கள்
உங்கள் குடை என் குடையுடன்
முட்டிக்கொள்ளும்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
Share with others