- மாலியன்
கல்லறையற்ற பிணங்கள்
“ சோழக்காற்றில் சுழண்டது மேகம் -
மேல் வானிலிருந்து கீழாயும், கீழிருந்து மேலாயும்
என் நெஞ்சைப்போல் எம் வரலாற்றுப் பாதைகளைப்
புரட்டியபடி!
எம் சமுதாய முன்னேற்றப் நோக்கில் (இன்றைய)
வரலாற்று சுவடுகள் பதித்ததெல்லாம் பூச்சியங்களே; -
இலக்குகள் இன்றி இயக்கங்கள் முண்டியடித்து
சண்டைகள் போட்டன தமக்குள்ளே:
அண்ணனைக் கொன்ற தம்பி,
தம்பியைக் கொன்ற அண்ணன்
என்று தம் கட்டுக்கோப்புகளை மெச்சிய வண்ணம்
யார் தம் மக்களை அடக்கியாள்பவரென்று;
பல்லாங்குளியாட்டத்தில் வென்றவரிருக்க
தோற்றவர் பல்லக்குத் தேடி பகைவரையும் அடைந்தனர்!
மனிதம் இங்கு வாய், மூக்கு, கண், காதுகளுடன்
பிணங்களின் மத்தியில் கல்லறையில் இல்லாத பிணங்களாய்
உயிர்ப்பின் அர்த்தங்களைப் புதைத்தபடி! ”
3-1992
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-02-13 00:00