- மாலியன்
தொலைத்த வசந்தம்
“ இலைகள் தூவி அழைத்த
மரங்களுக்கு இணைங்கி
தடங்கள் பதித்த வசந்த காலங்களையும்,
சிறு வயதில்
நான் ரசித்த குயில் பாட்டுக்களையும்,
தென்னை மரப் பொந்துகளில்
தலை நீட்டிடும் சிறு கிளிக்குஞ்சுகளையும்,
மழைத்துறல்களில் வரும்
என் மண்ணின் மணத்தையும்,
மீண்டும் எப்போது நான் ரசிப்பேன்?
இப்போதும் வசந்தகாலஙகள் வருகின்றன
ஆயினும் மரங்கள்
தான் இல்லை
இன்றும் குயில்கள் பாடுகின்றன
ஆம் குஞ்சுகளை இழந்த
சோகத்தில் ஒப்பாரியாக
இன்றும் பட்ட தென்னையில்
பொந்துகள் உள்ளன கிளிகள்
இல்லை
ஆயினும்
இன்றும் மணக்கின்றது
மழைத்தூறல்களில் நம் தேசத்து மண்
- உடன் -
காய்ந்து போன குருதியின் வாடை! ”
--மாலியன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-02-06 00:00