- மாலியன்
ஏழையின் தேர்தல் நாள்
“ வாக்குரிமையை எண்ணி மகிழ்ந்தது
ஏழை மனம்
தேர்தல் நாளில் றேசன் காட்டாய் வாக்குச்
சீட்டு ”
3-92 India
ஏழ்மை
“ சூரியகிழவன் தனது முதிர்ந்த கரங்களால்
இருளைக் கிழித்து, காற்றை முகர்ந்தது
பரந்த உலகில் - ஆங்கோர் தாயின் சாபம் ஏற்ற
வண்ணம்,
என்றும் அவள் இரவையே வேண்டுகின்றாள்:
ஆம், அவள் குழந்தைகள் பசியை மறந்து
உறங்கும் என்பதற்காக ”
1-93 - India
அசைவு
“அசைவுகள் அசைவின்றி
அசைந்த வண்ணம்
பிரபஞ்ச வெளிகளில் ”
1992
இறப்பு
“மனித நகர்வின் படிப்படி வளர்ச்சிகளின்
இயக்கக் கட்டுப்பாடு
ஆயினும் ஆன்மாவின் சிறை
மீட்புப் போலும் ”
1992
புகலிடம்
“ இலையுதிர் காலத்து பறவைகள் போலே
புகழிடம் தேடிபறந்தவர்கள் நாஙகள் -
ஆயினும் புகலிடம் என்பது அடிமைத்தனம்
போலும்,
ஏனெனில் சிறைக்கதவுகளும் அடைக்கலம்
கொடுத்தன! ”
5-3-1992
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-02-06 00:00