- மாலியன்
எண்ணிக்கை
--------------------
இழப்புகள் யாவும்
எண்ணிக்கையாகிப் போனதால் -
செய்திகளுக்குள் எத்தனை இன்று விழுந்தது
என்பது மட்டுமே தெரிகின்றன.
முந்தைய பொழுதொன்றில் விழுந்த
பத்து பெயர் (தெரியாதவர்களுக்காக) களுக்கு
பதிலாக பதினைந்து எதிரி விழுந்திருந்தால்
நாங்கள் திருப்தியுற்றவர்களாக -
காலச் சுழற்சியில்
இன்று இருபாதாயிரம் விழுந்தும்,
ஏனோ எண்ணிக்கை சற்றே கூடியிருந்தால்
தேசம் கிடைத்திருக்கும் என்பதாய்....
ஆயினும் முன்பு ஒரு பொழுதில்
வயோதிபத்தில் இறந்த என் பாட்டியின் மரணம்
நெஞ்சை உறுத்தி செல்ல அது மட்டும்
எண்ணிக்கை யாக்க முடியவில்லை....
ஜீன் 6 - 2009
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-06-15 00:00