தோழன் முத்துக்குமாருக்கும் தோழர் ரவிக்கும் மலேசியாவில் இறந்ததாக அறிந்த
தோழருக்காகவும்....
---------------------------------------------------------------------
ஏன்
தோழர்களே இந்தக்
கொடிய
முடிவு மூச்சடைத்து
வார்த்தைகள்
மறுக்கிறது ஓவெனக்
கதறியழ
உங்களைப்
பெற்றவர்கள் உடன்பிறந்தோர்
உறவுகள்
தோழர்களுடன் இணைக்கிறேன்
நானும்
நெஞ்சு வலிக்கிறது
கரம்குவித்துக் கேட்கிறோம்
யாரும் இனி எடுக்காதீர்கள்
இந்த
முடிவை
தோழர்களே
ஈழத்துச்செய்திகள்
உலுக்கிடும்
இந்நேரம் உங்களையும்
இழக்க தயாராக
இல்லை நாம்
..
நெஞ்சு
வலிக்கிறது தோழனே
முத்துக்குமார் நீ
எழுதிய சாசனம் மிகவும்
வலியது
இவ்வளவு
அறிந்தும் எதுவுமே
இயலாதென்று கருகிய
உன்னுடல் சொல்லிய
செய்திகள் உன்
கடிதத்திலும் மேலானது
நீங்கள் இறந்திருக்கக்கூடாது
பாசிச
அரசுகளுக்கு மனித
உயிர்கள் பெரிதில்லை
இந்த
முடிவுக்கு உங்களைத்
தள்ளியவர்களை வன்மையாகக்
கண்டிக்கிறோம்
நீ
இட்ட தீ ஒளிக்கட்டும்
இந்த
அரசுகளை இதயம்
வலிக்கிறது தோழர்களே இந்தக்கொடிய
முடிவை எண்ணி
நீங்கள்
இறக்கவில்லை தோழர்களே
வாழ்கிறீர்
எம்முள்..
-றஞ்சினி