அழிய மறுக்கும்...
------------------

குப்பைக்காடாய்
குவிந்துகிடக்கும்
நினைவுகளை
எரிக்கநினைக்கையில்
அழுது விழுந்து
ஆர்பரிக்கிறது
உனது நிழல்
சிறிது தளர்ரும் மனதை
இறுகப்பூட்டி
கவனமாக
தொடங்கியதிலிருந்து
முடிந்ததுவரை
சேர்த்து
எரிக்கும்போது
ஆவியாகி மீண்டும் என்னுள் நீ

-றஞ்சினி

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-04-14 00:00
Share with others