மைன் நதியோடு..
--------------------

மங்கிய மின் ஒளியில்
நனைந்து கொண்டிருக்கும்
மைன் நதியில்
உறங்கிக் கொண்டிருக்கும்
நகரத்தை
படம் பிடிக்கும்போது
எங்கிருந்தோ வந்து
தழுவிய பனிக்காற்று
நதியுடன் போராடி
என் நினைவுகளை
மீட்டுச்செல்கிறது

கலங்கிய நதியில்
அதிர்கிறது நகரம்
கலைந்துபோகிறது
புகைப்படக்கனவும்.

-றஞ்சினி

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-11 00:00
Share with others