நாளை உலகின் முடிவு
....................
தொலைக்காட்சியில்
நாளை உலகம் அழியப் போவதாக அறிவித்தனர்
எங்கும் அமைதி
யாரும் பரபரக்கவில்லை
எவர்க்கும் நாளைப் பற்றிய சிந்தையில்லை
பசி பிணி கடன் பற்றிய நினைவில்லை
பிறப்பு இறப்பு பற்றிய பயமில்லை
காமம் க்ரோதம் எதுவும் தலைத்தூக்கவில்லை
பொது கூட்டங்கள் இல்லை
பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இல்லை
உண்ணாவிரத போராட்டஙகளும் இல்லை
கூச்சல் இல்லை குழப்பம் இல்லை
பணம் ஏற்படுத்திய வேற்றுமையில்லை
நிறமில்லை பேதமில்லை
பகலில்லை இரவில்லை
யாருக்கும் அடையாளங்களில்லை
அனைவரும் அமைதியாக உறங்கினர்
நாளைப் பற்ற்ய உணர்வின்றி.....

- கீதா ரங்கராஜன்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-31 00:00

கருத்துகள்

இன்றைய மனிதர்களின் யதார்த்தமான மனப்போக்கை விவரிக்கும் கவிதை. ரசித்தேன். பாராட்டுக்கள்!

> கிரிஜா மணாளன்,
திருச்சிராப்பள்ளி ‍ 620021.

Share with others