கலைந்த கனவு
கண் மூடும் போதிலே
கனவொன்று வந்ததே
அந்தகார காரிருள்
அதில் கீற்றாய் ஓர் உருவம்
யார் என நான் நோக்க
என் அன்னையின் பொன் முகம்
தொட்டு தழுவும் ஆவலில்
கையை மெதுவாய் உயர்த்திட
கையும் எழும்ப மறுத்ததே
நாவும் புரள மறுத்ததே
கனவு கலையும் அச்சத்தில்
கண்கள் இறுக மூடினேன்
உருவம் மெல்ல மறைந்தது
அந்தகாரம் சூழ்ந்தது
மீண்டும் அதே கனவையே
தொடர வைக்கும் ஆவலில்
கண்கள் மூடி காத்திருக்க
உறக்கமில்லை விழிகளில்
கனவும் இல்லைக் கண்களில்
கண்ணீர் மட்டும் மிச்சமே
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-09 00:00