நினைவு.
---------

சகியே.....
புதைத்துவிடச் சொன்னாய்
நானும் செய்தேன்
ஆழமாய்தான் புதைத்தேன்-ஆனால்
விதைத்து விட்டதாய் எண்ணி
விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது
என் இதயப்பரப்பு பூராவும்
உன் நினைவு.

காதல்
----------
சகியே...
பக்கத்தில் நீயில்லை
பந்தயக்குதிரையாய்
விடாமல் துரத்தும்
உன் நினைவுகள்
என் ஒவ்வொரு நாழியையும்
வார்த்தைகளுக்குள்
வளைக்கமுடியாத வலியோடு
நகர்த்துகிறதடி....

எப்படியோ
நடந்ததைச் சொன்னேன் உன்னிடம்
சரியாகிவிடுமென்கிறாய் சாதாரணமாக
நானும் திரும்பக்கேட்டேன்
நீ மௌனிக்கிறாய்....
எனைப்போலத்தானே
உனக்குமிருக்கும் அவஷ்தைகள்
இருக்கவேண்டுமென்கிறது
என் மனமென்றேன்

ஒருவருக்கு வலித்தால்
காதலில்லையென்கிறாய்
நான் மௌனிக்கிறேன்
என் அறியாமையையும்
உன் காதலையும் நினைத்து.

தென்றல் இரா.சம்பத்
ஈரோடு-2

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-02 00:00

கருத்துகள்

தென்றல் இரா.சம்பத் அவர்களை கல்லூரி காலத்திலேயே அறிவேன்.அப்போதும் சரி இப்போதும் சரி அதிகமாய் காதல் கவிதை எழுதினாலும் பிரிவின் வலியை வேதனையாய் சொல்லாமல் சந்தோசமாய் சொல்கிறார்.இதில் கூட என் இதயப்பரப்பு பூராவும் வளர்ந்து விட்டாய் என்று சந்தோசப்படுகிறார்.இன்னும் இவரிடமிருந்து வார்ப்பு வாசகர்கள் நிறையவே எதிர்பார்க்கலாம்.

அன்புடன் செழியன்,
அரியலூர்.

Share with others