சுமை
என் பேனாமுனையில்
பிறவியெடுக்கும்
இந்த மௌனச்சொற்களில்
என் மனதோடு மல்லுக்கட்டும்
உன் பிரிவை.. நினைவை...
பெரிதுபடுத்தி
எழுதத்தெரியவில்லை எனக்கு.
உறவு! பிரிவு!
இரண்டும் சுமைதான்
உறவில்
மகிழ்வே ஒரு சுமை!
மகிழ்ந்து பிரிந்தபின்-அதுவே
நமக்கு மனச்சுமை!
பிரிவுக்காக
இந்த மனம் ஏன்
இப்படி கணக்கிறது.!
பிரிவு-அது
உறவில் அரங்கேறிய
ஊமை நாடகம்.........!
நாடகம் முடியும் நேரம்
நாமாக கலையாமல்
நாட்களும் நாழிகளுமே
நமை கலைக்கும்போது
நமக்கென்ன கவலை
காத்திருப்போம் காதலோடு........
தென்றல்.இரா.சம்பத்
ஈரோடு-2
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-01-21