பெண்ணே !
தயவுசெய்து என்னை துளியும் வதைக்காதே
உன் கோபதாபங்களை எல்லாம்
என் மீது கொட்டித்தீர்க்காதே
என்னால் எதையுமே தாங்கமுடியாது
தாங்கும் வலிமையும் இல்லை
ஆணுக்குரிய குணங்கள் யாவும்
என்னிடம் நிறையவே இருக்கின்றன - ஆனாலும்
ஏனோ உனைக் கண்டதும்
இவை யாவும் செத்துப்போய் விடுகின்றன
உன் முன்னால்... மௌனம்
அது மட்டுந்தான் என்னுடன் துணையாக
மரத்துப்போன உணர்வுகள் எல்லாம்
மீட்கப்படுவதுபோல் ஒரு உணர்ச்சி - இருந்தும்
நான் ஒரு காட்டாற் றுக்கு நிகரடி... ஆனால்
நீ யார்?
அந்த நிலவுக்குப் பிறந்தவளா ? இல்லையேல்
ஏன் என்னை ஒவ்வொரு இரவும்
உன் கரங்களால் தீண்டித்
தொந்தரவு செய்கிறாய் ?

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
Share with others