எனக்குள் உறங்கிக்கொண்டிருக்கும்
சிந்தனைகளை-மெலிதாய்
தட்டியெழுப்பி
என்னோடு கொஞ்சம்
பேசமுற்பட்டபோது..
இறந்துபோன காலத்தின்
நினைவுகள் மட்டும்-இன்னமும்
இறக்காமல்
நெஞ்சை வேகமாய் மோதிச்சென்றது
வார்த்தைகள் மெதுவாய் அடங்க
தர்க்கம், குதர்க்கம்
எல்லாமே ஓய்ந்துவிட்டது
பரிவு, இரக்கம்கூட
கொஞ்சம் கொஞ்சமாய்
குறைந்துவிட்டது
பந்தம், பாசம்
எல்லாமே போலி வேசம்
மனம் வேதனையுடன் ஓலமிட்டது
இதுவரையில் அணிந்திருந்த-அவர்களின்
முகமூடிகள் எல்லாம் கிழிந்து
உருக்குலைந்த நிலையில்
நிஜமான முகங்கள் என்முன்னிலையில்
தோற்றமளித்தது
எனக்கென யாரும் இல்லை
தொண்டைக்குழி அடைத்து-மனம்
விம்மிக் கலங்கியது-ஆனால் என்
சிந்தனை வெகுவேகமாய்
அதை நிராகரித்துச் சென்றது
”உறவு என்று எதுவும் இல்லை”
நண்பனின் வாசகம் -நெஞ்சில்
அடிக்கடி வந்துபோனது
மளுங்கிப்போன பார்வை
மெல்ல விலக
தெளிவான பார்வைக்குள்-பல்வேறு
விம்பங்களாய் நான்
”இன்பம் துன்பம் எதுவந்தாலும்
உன்னோடு நான் இருப்பேன்
துவழாது துணிந்து நில்!” எனக்குள் இருக்கும்
”நான்” ஏகாந்தமாய் என்னோடு
பேசிவிட்டுச் சென்றது
இது போதுமெனக்கு
நெஞ்சம் கல்லாகிறது..
unmayna vaarthaihal... alahana kavithai.. anupavama endru theriyavillai... aanal unarvupoorvamana eluthukal... vaalthukal... ungal kavithai mihavum alahaha ullathu...