நீ உன் காதலைத் தெரிவுக்கும்போது
எனக்கு தெரிந்ததில்லை
நீ எனக்குள் ஒளிந்திருந்ததை
அன்று
நீ பாலைவனத்தில் வீசிய
தென்றல் போல் வந்தாய்
இன்று
இயற்கையின் சீற்றத்துக்குள் அகப்பட்ட
தென்றலாய் நிலை தடுமாறுகின்றாய்
அன்றெல்லாம்
பாரதி முழங்கிய வார்த்தைகளை
உன்னுள் முணுமுணுத்தாய்
இன்று
அவையெல்லாம் ஒரு நடிப்புத்தான்
என உன்னை நீயே
ஏமாற்றுகின்றாய்
நான் உனக்குள் எதையுமே தேடவில்லை
ஆம்
உன் அன்பைத் தவிர
உனக்கு காதலொரு விளையாட்டு
ஆனால் எனக்கது உயிர்நாடி
என் காதலே
தயவுசெய்து நம் காதலை வரையறை
செய்யாதே!
உன் வார்த்தைகளை உனக்குள் முடக்காதே !
உன் உணர்ச்சிகளையெல்லாம் கடமைக்காக
வெளிக்காட்டாதே
நீயும் என்னைப்போல் பத்துமாதம் பொறுமையாக
தாயின் கருவறையில் சிறையிருந்தவன் தானே
ஆனால்
இப்போதெல்லாம் நீ சில கணங்களில்
பொறுமையிழந்தவனாய்
விருப்பு வெறுப்பில்லாத நிர்வாண நிலையில்
உன்னை மாற்ற எத்தனிக்கின்றாய்
என்னுயிரே இப்போதாவது சொல்
உனக்குள் ஏன் இந்த மாற்றம் ?
- எதிக்கா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00