ஜனனத்தில் தோன்றி மரணத்தில்
முடிவதுதான் வாழ்க்கை
அதிலே காதல் ஒரு வானவில்
எங்கோ ? எப்படியோ ?
வெயிலும் மழையும் சந்திக்கும்போது
தோன்றுகின்றது
எனக்கு மட்டும் ஒரு நப்பாசை- ஆம்
நம் காதல் மட்டும் வானவில்லாக
இருக்கக்கூடாதென்று
ஏனெனில் நானும் நீயும்
வெயிலும் மழையும் போல
வேறு வேறல்ல.

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00

கருத்துகள்

zeenu on 2010-06-30 00:00

நான் நீ அல்ல நாம் என்ற கருத்துக்கு உம்முடைய கவிதை சிறப்பாக உள்ளது

கவிதைகள் அத்தனையும் அருமை "நீயும் நானும் வெயிலும் மழையும் போல் வேறு வேறு அல்ல" புதிய சிந்தனை வாழ்த்துக்கள் நண்பரே..!
http://www.kalaisolai.co.ccrn

Share with others